Sunday , 23 March 2025
Home Cinema News தமன்னாவுக்கு விரைவில் டும் டும் டும்… திருமண ஏற்பாடுகள் தடபுடல்!
Cinema News

தமன்னாவுக்கு விரைவில் டும் டும் டும்… திருமண ஏற்பாடுகள் தடபுடல்!

tamannah

நடிகை தமன்னா:

பான் இந்தியா நடிகையாக பார்க்கப்படும் நடிகை தமன்னா தமிழ் சினிமாவில் கேடி திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகினார். அதை அடுத்து பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார்.

குறிப்பாக அஜித் சூர்யா விஜய் தனுஷ் உள்ளிட்ட பல நட்சத்திர நடிகர்களுடன் சேர்ந்து ஜோடி போட்டு நடித்து பிரபலமான நடிகை என்ற இடத்தை தக்க வைத்துக் கொண்டார் நடிகை தமன்னா. இவரது நடிப்பில் வெளிவந்த அயன் , பையா, வீரம்,தேவி,அரண்மனை 4 , ஜெயிலர் போன்ற படங்கள் அவருக்கு என தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொடுத்தது .

விஜய் வர்மாவுடன் காதல்:

இதனிடையே அவர் பாலிவுட்டில் அதிகப்படியான படங்களில் நடித்த வருகிறார். இந்த நிலையில் பாலிவுட் இளம் நடிகரான விஜய் வர்மாவை கடந்த சில வருடங்களாகவே நடிகை தமன்னா காதலித்து வருகிறார். அதனை இருவரும் உறுதிப்படுத்தினார்கள்.

இதை அடுத்து பொது நிகழ்ச்சிகளுக்கு இருவரும் சேர்ந்தே வருகிறார்கள். இதனால் இவர்களது காதல் மிகவும் ஸ்ட்ராங்காக இருப்பதாகவும் விரைவில் இவர்கள் அடுத்த கட்ட நடவடிக்கையாக திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் என்று கூட அவ்வப்போது செய்திகள் வெளியாகி வந்தது.

திருமண ஏற்பாடுகள் தடபுடல்:

இந்த நிலையில் தற்போது அந்த திருமண தகவல் உறுதியாகி இருக்கிறது. ஆம் சமீபத்தை பேட்டி ஒன்றில் தமன்னா தன்னுடைய திருமணம் குறித்து பகிர்ந்து கொண்டார். அதில் 2025 ஆம் ஆண்டு நான் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருக்கிறேன்.விஜய் வர்மாவுடன் திருமண வாழ்க்கையை துவங்க மிகவும் ஆர்வமோடு இருக்கிறேன் என கூறிய தமன்னா அடுத்த ஆண்டின் துவக்கத்திலேயே திருமணம் நடக்க இருப்பதாகவும் கூறினார் .

மேலும் அதற்கான வேளைகளில் தற்போது குடும்பத்தினர் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்திருக்கிறார். எனவே திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருவதால் தமன்னாவின் திருமண செய்தியும் அதன் தேதியும் விரைவில் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை அடுத்து தமன்னாவுக்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களையும் தங்களது பாராட்டுகளையும் தெரிவித்து வருகிறார்கள்.

  • dhool movie famous song used in veera dheera sooran movie தூள் படத்தில் இடம்பெற்ற மாஸ் ஆன பாடலை மீண்டும் கொண்டு வந்த வீர தீர சூரன் படக்குழுவினர்…
  • Related Articles

    dhool movie famous song used in veera dheera sooran movie
    Cinema News

    தூள் படத்தில் இடம்பெற்ற மாஸ் ஆன பாடலை மீண்டும் கொண்டு வந்த வீர தீர சூரன் படக்குழுவினர்…

    சீயானின் அதிரடி திரைப்படம் சீயான் விக்ரம் நடிப்பில் வருகிற 27 ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம்...

    good bad ugly premiere show cancelled
    Cinema News

    குட் பேட் அக்லி திரைப்படத்துக்கு இப்படி ஒரு நிலைமையா? ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் செய்தி!

    எகிறும் எதிர்பார்ப்பு அஜித்குமாரின் “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற ஏப்ரல் 10 ஆம் தேதி...

    vani bhojan angry on press reporter
    Cinema News

    பத்திரிக்கையாளர் கேட்ட கேள்வியால் கடுப்பான வாணி போஜன்! அப்படி என்ன கேள்வி கேட்டிருப்பாங்க?

    சீரீயல் டூ சினிமா ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மாயா” என்ற தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர்...

    good bad ugly movie director reveals the ajith kumar character in movie
    Cinema News

    குட் பேட் அக்லி திரைப்படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் இதுதான்- ஓப்பனாக போட்டுடைத்த ஆதிக் ரவிச்சந்திரன்

    எகிறும் எதிர்பார்ப்பு அஜித்குமாரின் “விடாமுயற்சி” திரைப்படத்திற்கு அதிகளவு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அத்திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை...