Monday , 24 March 2025
Home Cinema News 12 கோடி செலவு செய்து எடுக்கப்பட்ட பாடலை எடிட்டிங்கில் தூக்கி வீசிய ஷங்கர்- வருத்தத்தில் பிரபல தயாரிப்பாளர்
Cinema News

12 கோடி செலவு செய்து எடுக்கப்பட்ட பாடலை எடிட்டிங்கில் தூக்கி வீசிய ஷங்கர்- வருத்தத்தில் பிரபல தயாரிப்பாளர்

12 crore budget song deleted from game changer movie

சுமாரான வரவேற்பை பெற்ற ஷங்கர் படம்

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான “இந்தியன் 2” திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு சரியாக போகவில்லை. “இந்தியன் 2” திரைப்படத்தின் சுமாரான வரவேற்பை தொடர்ந்து இயக்குனர் ஷங்கரின் “கேம் சேஞ்சர்” திரைப்படம் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவந்தது. 

12 crore budget song deleted from game changer movie

“கேம் சேஞ்சர்” திரைப்படத்தின் மீது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் “கேம் சேஞ்சர்” திரைப்படமும் சுமாரான வரவேற்பையே பெற்றது. 

ஒரு பாடலுக்கு 12 கோடி 

ஷங்கர் திரைப்படங்கள் அதிகளவு பட்ஜெட்டில் எடுக்கப்படுபவை என்பது பலரும் அறிந்ததே. எனினும் அவரது திரைப்படத்தில் இடம்பெறும் பாடல் காட்சிகள் முதற்கொண்டு அதிக செலவில் படமாக்கப்படுவது வழக்கம். 

அந்த வகையில் “கேம் சேஞ்சர்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் 12 கோடி செலவில் படமாக்கப்பட்டிருந்தது. ஆனால் அப்பாடல் திரைப்படத்தில் இடம்பெறவில்லை. இது சினிமா திரையுலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது ஒரு சிறந்த உதாரணம்….

இந்த நிலையில் சமீபத்தில் தனது வீடியோ ஒன்றில் பேசிய பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன், “கேம் சேஞ்சர்” திரைப்படத்திற்காக ரூ.12 கோடி செலவில் படமாக்கப்பட்ட பாடல் இடம்பெறாதது குறித்து தனது வருத்தத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். 

12 crore budget song deleted from game changer movie

“இப்போதுள்ள இயக்குனர்கள் எந்தளவுக்கு திட்டமிடாமல் ஒரு படத்தை உருவாக்குகிறார்கள் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம். இதனால் எத்தனை கோடி பொருள் நஷ்டம் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளருக்கு ஏற்பட்டிருக்கும் என்று நினைத்து பாருங்கள். இப்படித்தான் இன்றைக்கு பல இயக்குனர்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் வருத்தத்திற்குரிய விஷயம்” என்று தனது வருத்தத்தை அந்த வீடியோவில் பகிர்ந்துள்ளார். 

  • jananayagan movie pongal release பொங்கலுக்கு எப்பவுமே குறி தப்பாது! இது ஜனநாயகன் பொங்கல்…
  • Related Articles

    jananayagan movie pongal release
    Cinema News

    பொங்கலுக்கு எப்பவுமே குறி தப்பாது! இது ஜனநாயகன் பொங்கல்…

    விஜய்யும் பொங்கலும் பொங்கல் தினத்தில் வெளியாகும் விஜய் திரைப்படங்கள் பெரும்பாலும் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும். “கோயம்பத்தூர்...

    the first choice for oo solriya song was ketika sharma
    Cinema News

    ஊ சொல்றியா பாடலுக்கு நடனமாடும் வாய்ப்பை தவறவிட்ட டிரெண்டிங் நடிகை? ஓஹோ!

    ஊ சொல்றியா மாமா அல்லு அர்ஜூனின் “புஷ்பா” திரைப்படத்தில் இடம்பெற்ற “ஊ சொல்றியா” பாடலை யாராலும்...

    Cinema News

    நயன்தாரா செய்த காரியத்தால் படப்பிடிப்பை விட்டு கோபமாக வெளியேறிய உதவி இயக்குனர்? என்னப்பா இது?

    மூக்குத்தி அம்மன் 2 நயன்தாரா தற்போது “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தில் நடித்து வருகிறார். “மூக்குத்தி...

    vijay antony introduce his relative to cinema
    Cinema News

    தமிழ் சினிமாவில் வரிசையாக அறிமுகமாகும் தயாரிப்பாளர்களின் வாரிசுகள்? வெறித்தனமா இறங்குறாங்க போலயே!

    வாரிசு நடிகர்கள் பாலிவுட், டோலிவுட் போன்ற துறைகளில் தயாரிப்பாளர்களின் வாரிசுகளோ அல்லது நடிகர், இயக்குனர்களின் வாரிசுகளோ...