மயக்கம் என்ன திரைப்படம்:
மிகச் சிறந்த திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர் என்ற இடத்தில் தக்க வைத்துக் கொண்டிருப்பவர் தான் செல்வராகவன். இவரது இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வெளிவந்த திரைப்படம் தான் மயக்கம் என்ன.

இந்த திரைப்படம் கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ஆம் தேதி வெளியாகியிருந்தது இந்த திரைப்படம் மிகச் சிறந்த திரைப்படமாக வசூல் ரீதியாக விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் மிகச்சிறந்த பாடல்கள் ரசிகர்களின் மனதை கவர்ந்தது.
யாமினி கதாபாத்திரம்:
இந்த திரைப்படத்தில் தனுஷின் ஜோடியாக யாமினி என்ற கதாபாத்திரத்தில் ரிச்சா நடித்திருப்பார். அவரது ரோல் படத்திற்கு மிகவும் அழுத்தமானதாக பார்க்கப்பட்டது. குறிப்பாக தனுஷ் வாழ்க்கையில் தோற்றுப் போகும்போதெல்லாம் மனைவியான ரிச்சா அவருக்கு கூட இருந்து அவரை தொழில் ரீதியாகவும் வாழ்க்கை ரீதியாகவும் ஒரு மனிதனாக தோல் கொடுத்து தேற்றும் விதம் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.

#13YearsOfMayakkamEnna:
இப்படி ஒரு மனைவி எல்லோரோட வாழ்க்கையிலும் அமைய வேண்டும் என அப்போதே பேசிக்கொண்டார்கள் .இந்த நிலையில் இந்த திரைப்படம் வெளியாகாகி இன்றுடன் 13 ஆண்டுகள் ஆவதை செல்வராகவும் தனது twitter பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதாவது யாமினி போன்ற ஒரு பெண் உங்களது வாழ்க்கையில் அமைந்துவிட்டால் நீங்கள் தான் இந்த உலகத்திலேயே மிகவும் லக்கி எனக்கூறி பதிவிட்டு இருக்கிறார். இதை அடுத்து நெட்டிசன்ஸ் எல்லோரும் #13YearsOfMayakkamEnna என கேப்ஷன் கொடுத்து லைக்ஸ் குவித்துள்ளனர்.
If you find a Yamini in your life , you are the most luckiest and blessed person in the world ? https://t.co/wFOTJ5osJm
— selvaraghavan (@selvaraghavan) November 25, 2024