கங்குவா திரைப்படம்:
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகராகவும் டாப் ஹீரோ என்ற அந்தஸ்திலும் இருந்து வருபவர் தான் நடிகர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படம் ஆக அமையும். அதாவது, 2000 கோடி வசூல் ஈட்டி தமிழ் சினிமாவின் வரலாற்றையே மாற்றப் போகிறது என்றெல்லாம் சூர்யா பேசியதால் இந்த திரைப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்தது.
படு தோல்வி அடைந்த கங்குவா:
ஆனால் படம் வெளியாகி முதல் ஷோ வெளியான உடனையே எதிர்பார்ப்பு மொத்தம் இறங்கிவிட்டது. ஆம் இந்த திரைப்படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்து விழுந்ததால் படம் படுதோல்வி அடைந்தது. வசூலில் மிகவும் பின்தங்கி அட்டர் பிளாப் ஆகிவிட்டது கங்குவா.
இதனால் சூர்யா மிகுந்த வேதனைக்கு உள்ளாகி இருக்கிறார். மேலும் பிரபலங்கள் ரசிகர்கள் பலரும் இந்த படத்தை மோசமாக விமர்சித்து வந்தார்கள். இதனால் துவண்டு போயிருக்கும் சூர்யாவுக்கு கொஞ்சம் ஆறுதலாக நடிகர் மாதவன் போட்ட பதிவு தற்போது அவரது இதயத்தை இதமாக்கி இருக்கிறது .

ஆம் அந்த பதிவில் நடிகர் மாதவன்… என் அன்பு சகோதரா நான் கங்குவா திரைப்படத்தை மிகப்பெரிய திரையில் பார்த்தேன். என் அன்பு சகோதரரின் முயற்சி மற்றும் அர்ப்பணிப்பை பார்த்து நான் வியப்படைந்து விட்டேன்.
சூர்யாவை வியந்து பாராட்டிய மாதவன்:

அவர் செய்ததில் பாதியை நான் செய்ய விரும்புகிறேன். கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் கங்குவா என மாதவன் பதிவு செய்திருக்கிறார். அவரின் இந்த பதிவு சூர்யாவிற்கு பெரும் ஆறுதலாகவும் இருப்பதாகவும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். பலரும் விமர்சித்து வரும் சமயத்தில் மாதவன் இப்படி அவரை பாராட்டி கங்கா படம் குறித்து பதிவிட்டு இருப்பது அனைவரது பாராட்டுகளையும் பெற்றிருக்கிறது.