மனதில் நின்ற நாயகன்
1980களின் பிற்பகுதியில் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான ராம்கி, தனது வசீகரமான நடிப்பின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தார். அது மட்டுமல்லாது அந்த காலகட்டத்து இளம்பெண்களின் கனவு கண்ணனாகவும் திகழ்ந்து வந்தார் ராம்கி. சமீபத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான “லக்கி பாஸ்கர்” திரைப்படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார் ராம்கி.

Updated ராம்கி
GenZ எனப்படும் Late 90’s மற்றும் Early 2K கிட்ஸ் ஆகியோரின் சமூக வலைத்தள சொல்லாடல்கள் சமீப காலமாக டிரெண்டில் வலம் வருகிறது. Boomer, Cringe போன்ற வார்த்தைகளை உதாரணத்திற்கு கூறலாம். இந்த நிலையில் நடிகர் ராம்கி, சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியபோது Boomer என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை குறித்து கூறியுள்ளார்.

“1960களில் போர் காலம் சூழ்ந்திருந்தது. அந்த சமயத்தில் போர் எல்லாம் முடிந்து வீட்டிற்கு வந்த ஆண்களுக்கு சும்மா இருப்பதுதான் Entertainment. அந்த சமயத்தில் தான் குழந்தை உற்பத்தி அதிகமானது. அதனை குழந்தை Boom ஆகிவிட்டது என கூறுவார்கள். எங்கு பார்த்தாலும் Baby Boom என்று சொல்வார்கள். அவ்வாறு 1960களில் பிறந்தவர்கள்தான் Boomer. இப்போ யாராவது நிறைய பேச ஆரம்பித்தால் Boomer Uncle என்று கூறுவார்கள்” என்றார். ராம்கியின் இந்த பேட்டி வைரலான நிலையில் பலரும் “ராம்கி இவ்வளவு Update ஆக இருக்கிறாரே” என்று ஆச்சரியப்படுகிறார்கள்.