Tuesday , 18 March 2025
Home Cinema News ஒரே நாளில் கம்போஸ் செய்த ரஜினி பட பாடல்…வேற லெவல் ஹிட் அடித்த தரமான சம்பவம்! எல்லாம் தேவாவின் கைவண்ணம்…
Cinema News

ஒரே நாளில் கம்போஸ் செய்த ரஜினி பட பாடல்…வேற லெவல் ஹிட் அடித்த தரமான சம்பவம்! எல்லாம் தேவாவின் கைவண்ணம்…

deva composed a rajini song in one day

ரஜினியின் மாஸ் ஹிட் திரைப்படம்…

ரஜினிகாந்த் நடிப்பில் 1992 ஆம் ஆண்டு வெளியான “அண்ணாமலை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தை கே.பாலச்சந்தர் தயாரித்திருந்தார். தேவாவின் இசையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் பட்டித்தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட இசையமைப்பாளர் தேவா, இத்திரைப்படத்தை குறித்த ஒரு சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார். 

deva composed a rajini song in one day

ஒரே நாளில் கம்போஸ் செய்த பாடல்…

“அண்ணாமலை” திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த நாட்களில் ஒரு நாள் கே.பாலச்சந்தர் தேவாவிற்கு தொலைப்பேசியில் அவசர அவசரமாக தொடர்புகொண்டு, “ரஜினிக்கும் குஷ்புவுக்கும் ஒரு நாள் மட்டுமே கால்ஷீட் இருக்கிறது. எனக்கு ஒரே நாளில் ஒரு பாடல் வேண்டும்” என கேட்டாராம். அதற்கு தேவா, “ஒரே நாளில் எப்படி பாடல் கம்போஸ் செய்வது” என கூற அதற்கு பாலச்சந்தர், “உன்னால் முடியும் என எனக்கு தெரியும்” என கூறியுள்ளார். 

deva composed a rajini song in one day

இதனை உத்வேகமாக எடுத்துக்கொண்ட தேவா ஒரே நாளில் ஒரு பாடலை கம்போஸ் செய்து கொடுத்தாராம். அந்த பாடல்தான் “றெக்க கட்டி பறக்குதய்யா அண்ணாமலை சைக்கிள்” என்ற பாடல்.

  • harris jayaraj refused 10 films of vijay விஜய் படத்துக்குலாம் No சொல்லிட்டேன், 10 படத்துக்கு மியூசிக் போடவேண்டியது, ஆனா- உண்மையை உடைத்து பேசிய ஹாரிஸ் ஜெயராஜ்
  • Related Articles

    harris jayaraj refused 10 films of vijay
    Cinema News

    விஜய் படத்துக்குலாம் No சொல்லிட்டேன், 10 படத்துக்கு மியூசிக் போடவேண்டியது, ஆனா- உண்மையை உடைத்து பேசிய ஹாரிஸ் ஜெயராஜ்

    ஹாரிஸ் மாமா 90’ஸ் கிட்களால் ஹாரிஸ் மாமா என்று செல்லமாக அழைக்கப்படும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்,...

    aadhavan movie story wrote for vijayakanth
    Cinema News

    விஜயகாந்துக்காக எழுதப்பட்ட கதையில் ஹீரோவாக ஆன சூர்யா? ஆச்சரியமா இருக்கே!

    புரட்சி கலைஞர்  தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாது தமிழக மக்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடம்...

    coolie movie digital business beat endhiran 2 business
    Cinema News

    2.0 சாதனையை ஓவர் டேக் செய்த கூலி? இவ்வளவு தொகைக்கு பிசினஸ் ஆகியிருக்கா? அடேங்கப்பா!

    ரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜ் கூட்டணி லோகேஷ் கனகராஜ் ரஜினியை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் இறுதிகட்ட...

    shankar son arjith shankar introducing as a hero
    Cinema News

    ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன்? அதுவும் இந்த இயக்குனரோட படத்துலயா? 

    பிரம்மாண்டம்னா ஷங்கர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவே வியந்து பார்க்கிற ஒரு பிரம்மாண்ட இயக்குனர்தான்...