Wednesday , 26 March 2025
Home Cinema News வாழ்க்கை பிச்சை போட்டதே தனுஷ் தான்… நன்றி மறந்த விக்னேஷ் சிவன் – நட்பின் கதை தெரியுமா?
Cinema News

வாழ்க்கை பிச்சை போட்டதே தனுஷ் தான்… நன்றி மறந்த விக்னேஷ் சிவன் – நட்பின் கதை தெரியுமா?

dhanush vignesh shivan

தனுஷ் – நயன்தாரா பிரச்சனை:

கடந்த இரண்டு நாட்களாக தனுஷ் மற்றும் நயன்தாராவின் பிரச்சனை விவகாரம் தான் சோசியல் மீடியாக்களிலும் கோலிவுட் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நடிகர் தனுஷ் கடந்த இரண்டு ஆண்டுகளாக தனக்கு பெரும் தொல்லை கொடுத்து வருவதாகவும் என்னுடைய ஆவண படத்தை வெளியிடுவதற்கு 10 கோடி ரூபாய் கேட்டு எனக்கு டார்ச்சர் செய்ததாகவும் நயன்தாரா மூன்று பக்கங்கள் அடங்கிய குற்றச்சாட்டுகளை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

nayanthara vs dhanush

ஆனால் இதுவரை தனுஷ் இந்த விஷயம் குறித்து எதுவுமே பேசாமல் மௌனம் காத்து வருகிறார். இந்த நிலையில் தனுஷ் தான் விக்னேஷ் சிவனுக்கு வாழ்க்கை பிச்சை போட்டதே.ஆனால் நயன்தாராவை திருமணம் செய்து கொண்டு கொண்ட பிறகு நன்றி மறந்துவிட்டார் விக்னேஷ் சிவன் என்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

தனுஷ் உடன் நட்பு உருவானது எப்படி?

முன்னதாக தனுஷ் உடனான நட்பு உருவானது எப்படி? என்பது குறித்து விக்னேஷ் சிவன் பேட்டி ஒன்றில் பேசியது தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியதாவது… நான் தனுஷ் உடன் வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் இணைந்து பணியாற்றினேன். அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.அதை அடுத்து தனுஷ் என்னிடம்.. நான் உனக்கு ஏதாவது செய்ய வேண்டுமா? என்று கேட்டார்.

vignesh shivan nayanthara dhanush fight

உனக்கு என்ன வேண்டுமோ கேள்… என்று ஆப்ஷன் கொடுத்தார். உடனே நான் அவரிடம் சார் நீண்ட நாட்களாக நான் ஒரு கதை வைத்திருக்கிறேன். அந்த கதையை நீங்கள் தயாரித்தால் அது என்னுடைய வாழ்க்கையை மாற்றும் என்று கூறினேன். அதன் பிறகு அவர் நிச்சயம் நான் உனக்காக அதை செய்வேன் என வாக்கு கொடுத்தார்.

அதன் பிறகு ஹீரோ யார்? என்று என்கிட்ட கேட்டப்போ முன்னதாக இந்த கதையை கௌதம் கார்த்திக்கிடம் கூறி வைத்திருந்தேன்.அதை அவரிடம் சொன்னேன் அதன் பிறகு அப்படியே மாறி மாறி விஜய் சேதுபதி கைக்கு வந்தது. படத்திற்குள் நயன்தாரா அழைத்து வந்ததும் தனுஷ் தான்.

நயன்தாராவுடன் முதல் சந்திப்பு:

ஒரு நாள் ஹீரோயின் யார்? என்று என்னிடம் கேட்டார். நான் இந்த கதை ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கதையாக இருந்ததால் பிரபலமான ஹீரோயினாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறினேன். உடனே அவர் நயன்தாராவிடம் கதை சொல்கிறாயா? என்று கேட்டார். அதை கேட்டவுடன் என் மனதிற்குள் எப்படியும் நயன்தாரா இந்த கதை ஒத்துக்கொள்ள போவதில்லை என்ற எண்ணம் தான் வந்தது .

vignesh shivan nayanthara documentary netflix

சும்மா ஒருமுறை கதை சொல்லி ஒன்றரை மணி நேரம் அவரை பார்த்து விட்டு ஒரு போட்டோ எடுத்து விட்டு வந்துவிடலாம் என்று தான் நான் அங்கு சென்றேன். அவரை பார்க்கும் போது ஆட்டோவில் தான் நான் முதலில் சென்றேன். நயன்தாரா எனக்கு ஒரு கிரீன் டீ கொடுத்தார். அது எனக்கு பிடிக்கவே இல்லை. இருந்தாலும் அது பிடித்தது போல் நடித்துக் குடித்தேன்.

முதலில் அவர் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு என்னுடைய கதையை கேட்க ஆரம்பித்தார். அதுவே எனக்கு ஒரு புது அனுபவமாக இருந்தது. காரணம் என்ன என்றால்…. நான் இதற்கு முன்பு கதை சொன்ன ஆட்கள் எல்லாருமே கதையை கேட்கும்போது ஏதாவது ஒரு விஷயத்தை செய்து கொண்டு ஏனோ தானோ என்று தான் கேட்பார்கள் .

நன்றி மறந்த விக்னேஷ் சிவன்:

ஆனால் நயன்தாரா செய்தது எனக்கு தன்னம்பிக்கையை கொடுத்தது. அதன் பிறகு கதை சொல்ல ஆரம்பித்தேன். இரண்டு, மூன்று காமெடிகளுக்கு அவர் பயங்கரமாக சிரித்தார். அப்போது எனக்கு தெரிந்து விட்டது அவருக்கு கதை பிடித்து விட்டது என்று…. கதை சொல்லி முடித்த பின்னர் உடனே அவர் இந்த கதையில் நான் நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டார் .

vignesh shivan and nayanthara love story Beyond the Fairy Tale

அதன் பிறகு ஒவ்வொன்றாக அடுத்தடுத்த வேலைகள் ஆரம்பித்தது என விக்னேஷ் சிவன் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார். அவர் கூறியதை வைத்து பார்க்கும்போது விக்னேஷ் சிவனின் வாழ்க்கைக்கு பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து வைத்ததே தனுஷ் தான். அப்படி இருக்கும்போது நயன்தாராவை திருமணம் செய்து கொண்ட பிறகு அப்படியே நன்றி மறந்த நாயாக மாறிவிட்டார் விக்னேஷ் சிவன் என்றெல்லாம் அவரை மோசமாக நெட்டிசன்சும் தனுஷின் ரசிகர்களும் திட்டி வருகிறார்கள்.

  • veera dheera sooran part 3 movie lead in part 2 பார்ட் 3 படத்துக்கு Lead வைத்த இயக்குனர்? அப்போ பார்ட் 1? வீர தீர சூரன் இயக்குனரின் வித்தியாசமான முயற்சி!
  • Related Articles

    veera dheera sooran part 3 movie lead in part 2
    Cinema News

    பார்ட் 3 படத்துக்கு Lead வைத்த இயக்குனர்? அப்போ பார்ட் 1? வீர தீர சூரன் இயக்குனரின் வித்தியாசமான முயற்சி!

    முதலில் வரும் பார்ட் 2 சீயான் விக்ரம் நடிப்பில் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் வருகிற 27...

    Jananayagan and Parasakthi movie release on pongal
    Cinema News

    விஜய் துப்பாக்கியை வைத்து விஜய்யையே குறிபார்க்கும் சிவகார்த்திகேயன்? பொங்கலுக்கு தரமான போட்டி இருக்கு போல?

    ஜனநாயகன் பொங்கல் விஜய்யின் கடைசி திரைப்படமான “ஜனநாயகன்” 2026 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு...

    trisha telugu movie achieved that lot of times telecasted in television
    Cinema News

    அதிக முறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சாதனை படைத்த திரிஷா திரைப்படம்… அதுவும் இத்தன வாட்டியா?

    கும்கியை மறக்க முடியுமா? தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் விஜய் தொலைக்காட்சியில் “கும்கி”,  “துப்பாக்கி” போன்ற திரைப்படங்கள்...

    pradeep ranganathan fourth film announcement
    Cinema News

    பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் அறிவிப்பு! படத்தோட டைரக்டர் இப்படிப்பட்டவரா? வேற லெவல்…

    வளர்ந்து வரும் நடிகர் கோலிவுட்டின் வளர்ந்து வரும் நடிகராக பிரதீப் ரங்கநாதன் திகழ்ந்து வருகிறார். சமீபத்தில்...