Sunday , 23 March 2025
Home Cinema News சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்… அதிர்ச்சியில் திரையுலகம்
Cinema News

சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்… அதிர்ச்சியில் திரையுலகம்

high court order to seize sivaji ganesan home

அன்னை இல்லம்

நடிகர் திலகம் என்று புகழ்பெற்ற சிவாஜி கணேசன் வாழ்ந்த இல்லம் சென்னை தி.நகரில் அமைந்துள்ளது. இந்த இல்லத்தை அன்னை இல்லம் என்று அழைப்பார்கள். இந்த இல்லத்தை குறித்தும் இந்த இல்லத்தில் சிவாஜி கணேசனுடன் பழகிய நினைவுகள் குறித்தும் பல திரை பிரபலங்கள் சிலாகித்து பேசியது உண்டு. இந்த நிலையில் அன்னை இல்லத்தை ஜப்தி செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

high court order to seize sivaji ganesan home

வட்டியோடு சேர்ந்த கடன்…

சிவாஜி கணேசனின் பேரனான துஷ்யந்த் “ஈசன் புரொடக்சன்ஸ்” என்ற நிறுவனத்தின் மூலமாக “ஜகஜால கில்லாடி” என்று ஒரு திரைப்படத்தை தயாரித்திருந்தார். 2018 ஆம் ஆண்டு உருவான இத்திரைப்படத்தில் விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் இப்போதும் வரை வெளிவரவில்லை.

high court order to seize sivaji ganesan home

அந்த வகையில் இத்திரைப்படத்தை தயாரிக்க தயாரிப்பாளர் துஷ்யந்த் தனபாக்கியம் என்டெர்பிரைசஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து ரூ.3.74 கோடி கடனாக பெற்றுள்ளார். 

வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு

இந்த கடனை திருப்பி செலுத்தாததால் தனபாக்கியம் என்டெர்பிரைசஸ் நிறுவனம் நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வாங்கிய கடனை வட்டியுடன் சேர்த்து ரூ.9.39 கோடியை திருப்பி தரவேண்டும் எனவும் “ஜகஜால கில்லாடி” திரைப்படத்தின் அனைத்து உரிமைகளையும் தனபாக்கியம் என்டெர்பிரைசஸ் நிறுவனத்திடம் வழங்கவேண்டும் எனவும் தீர்ப்பளித்தார். 

high court order to seize sivaji ganesan home

ஆனால் பட உரிமைகளை வழங்க துஷ்யந்த் தரப்பு மறுத்துவிட்டது. இதனை தொடர்ந்து தனபாக்கியம் என்டெர்பிரைசஸ் நிறுவனம் சிவாஜி கணேசனின் வீட்டை பொது ஏலத்திற்கு விடக்கோரி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் துஷ்யந்த் நீதிமன்றத்தில் பதிலளிக்க கால அவகாசமும் கொடுக்கப்பட்டது. 

ஆனால் துஷ்யந்த் தரப்பு நீதிமன்றத்தில் பதிலளிப்பதற்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில் தற்போது சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது. 

  • dhool movie famous song used in veera dheera sooran movie தூள் படத்தில் இடம்பெற்ற மாஸ் ஆன பாடலை மீண்டும் கொண்டு வந்த வீர தீர சூரன் படக்குழுவினர்…
  • Related Articles

    dhool movie famous song used in veera dheera sooran movie
    Cinema News

    தூள் படத்தில் இடம்பெற்ற மாஸ் ஆன பாடலை மீண்டும் கொண்டு வந்த வீர தீர சூரன் படக்குழுவினர்…

    சீயானின் அதிரடி திரைப்படம் சீயான் விக்ரம் நடிப்பில் வருகிற 27 ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம்...

    good bad ugly premiere show cancelled
    Cinema News

    குட் பேட் அக்லி திரைப்படத்துக்கு இப்படி ஒரு நிலைமையா? ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் செய்தி!

    எகிறும் எதிர்பார்ப்பு அஜித்குமாரின் “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற ஏப்ரல் 10 ஆம் தேதி...

    vani bhojan angry on press reporter
    Cinema News

    பத்திரிக்கையாளர் கேட்ட கேள்வியால் கடுப்பான வாணி போஜன்! அப்படி என்ன கேள்வி கேட்டிருப்பாங்க?

    சீரீயல் டூ சினிமா ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மாயா” என்ற தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர்...

    good bad ugly movie director reveals the ajith kumar character in movie
    Cinema News

    குட் பேட் அக்லி திரைப்படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் இதுதான்- ஓப்பனாக போட்டுடைத்த ஆதிக் ரவிச்சந்திரன்

    எகிறும் எதிர்பார்ப்பு அஜித்குமாரின் “விடாமுயற்சி” திரைப்படத்திற்கு அதிகளவு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அத்திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை...