Monday , 24 March 2025
Home Cinema News சகுணமே சரி இல்லை, வேற மியூசிக் டைரக்டரை போடுங்க- இளையராஜா கம்போஸ் செய்த முதல் பாடலின்போது இவ்வளவு பிரச்சனை ஏற்பட்டதா?
Cinema News

சகுணமே சரி இல்லை, வேற மியூசிக் டைரக்டரை போடுங்க- இளையராஜா கம்போஸ் செய்த முதல் பாடலின்போது இவ்வளவு பிரச்சனை ஏற்பட்டதா?

shwetha mohan arises question that why national media have not carried the news of ilaiyaraaja symphony

லண்டனை அதிரவைத்த இளையராஜா

உலகமே தமிழர்களை திரும்பி பார்க்க வைத்த நிகழ்வு ஒன்றை அசாதாரணமாக செய்து முடித்து சாதனை படைத்துள்ளார் இளையராஜா. லண்டணின் ராயல் பிலார்மோனிக் இசைக்குழுவிடன் இணைந்து “வேலியண்ட்” என்ற தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றியுள்ள இளையராஜா மொசார்ட், பீத்தோவன் ஆகியோரின் வரிசையில் இணைந்த முதல் இந்தியர் என்ற பெருமையை தட்டிச்சென்றுள்ளார். 

ilaiyaraaja first symphony in london blast the world

கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர நிகழ்ச்சியில் 45 நிமிடங்கள் தொடர்ச்சியாக தனது சிம்பொனியை இசைத்துள்ளார் இளையராஜா. இந்நிகழ்வு உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளது. 

முதல் படத்தில் ஏற்பட்ட தடங்கல்கள்

இளையராஜா “அன்னக்கிளி” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார் என்பது பலரும் அறிந்ததே. ஆனால் அத்திரைப்படத்தின் முதல் பாடலை கம்பொஸ் செய்தபோது தொடர்ந்து ஏற்பட்ட தடங்கல்கள் யாரும் அறியாதது. 

இத்திரைப்படத்தின் முதல் பாடலின் ஆர்கெஸ்டிராவை முடித்துவிட்டு அப்பாடலை கேட்க தயாரானபோதுதான் அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. ஏதோ ஒரு கவனக்கோளாறால் ரெக்கார்டிங் செய்யக்கூடிய கருவியின் பொத்தானை அவர்கள் On செய்யவில்லையாம். அதனால் பாடல் ரெக்கார்ட் ஆகவில்லை. அதிர்ந்துப்போன இளையராஜா, மீண்டும் கம்போஸ் செய்ய தயாரானபோது 1,2,3 Start என்று கூறியவுடன் மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிட்டது. “சகுணமே சரியில்லையே” என்ற பேச்சுக்கள் காதில் விழுந்திருக்கிறது. 

ilaiyaraaja first symphony in london blast the world

அதனை தொடர்ந்து கம்போஸிங் முடிந்து பாடல் மிகவும் அருமையாக வந்திருந்தது. எனினும் சிலர் அத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான பஞ்சு அருணாச்சலத்திடம் வந்து “எல்லாமே அபசகுணமா நடக்குது, வேற மியூசிக் டைரக்டரை போடலாம்” என்று கூறினார்களாம். ஆனால்  பஞ்சு அருணாச்சலம் அதற்கெல்லாம் அசரவில்லை. இவ்வாறு பல தடங்கலையும் மீறி இளையராஜா தற்போது உலகமே திரும்பி பார்க்கும் இசையமைப்பாளராக ஜொலித்துள்ளார். 

  • jananayagan movie pongal release பொங்கலுக்கு எப்பவுமே குறி தப்பாது! இது ஜனநாயகன் பொங்கல்…
  • Related Articles

    jananayagan movie pongal release
    Cinema News

    பொங்கலுக்கு எப்பவுமே குறி தப்பாது! இது ஜனநாயகன் பொங்கல்…

    விஜய்யும் பொங்கலும் பொங்கல் தினத்தில் வெளியாகும் விஜய் திரைப்படங்கள் பெரும்பாலும் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும். “கோயம்பத்தூர்...

    the first choice for oo solriya song was ketika sharma
    Cinema News

    ஊ சொல்றியா பாடலுக்கு நடனமாடும் வாய்ப்பை தவறவிட்ட டிரெண்டிங் நடிகை? ஓஹோ!

    ஊ சொல்றியா மாமா அல்லு அர்ஜூனின் “புஷ்பா” திரைப்படத்தில் இடம்பெற்ற “ஊ சொல்றியா” பாடலை யாராலும்...

    Cinema News

    நயன்தாரா செய்த காரியத்தால் படப்பிடிப்பை விட்டு கோபமாக வெளியேறிய உதவி இயக்குனர்? என்னப்பா இது?

    மூக்குத்தி அம்மன் 2 நயன்தாரா தற்போது “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தில் நடித்து வருகிறார். “மூக்குத்தி...

    vijay antony introduce his relative to cinema
    Cinema News

    தமிழ் சினிமாவில் வரிசையாக அறிமுகமாகும் தயாரிப்பாளர்களின் வாரிசுகள்? வெறித்தனமா இறங்குறாங்க போலயே!

    வாரிசு நடிகர்கள் பாலிவுட், டோலிவுட் போன்ற துறைகளில் தயாரிப்பாளர்களின் வாரிசுகளோ அல்லது நடிகர், இயக்குனர்களின் வாரிசுகளோ...