Tuesday , 18 March 2025
Home Cinema News வடிவேலு படமா? அப்போ எப்படி விலைக்கு வாங்குறது…? வைகைப்புயலுக்கு வந்த சோதனையை பாருங்க…
Cinema News

வடிவேலு படமா? அப்போ எப்படி விலைக்கு வாங்குறது…? வைகைப்புயலுக்கு வந்த சோதனையை பாருங்க…

ott hesitate to buy vadivelu movie in high price

வலுவிழந்த வைகைப்புயல்…

வடிவேலு ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் டாப் காமெடி நடிகராக வலம் வந்தார். அவரது காமெடி காட்சிகள் இந்த உலகம் உள்ளவரை ரசிகர்களின் மத்தியில் ரசிக்கப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்தளவுக்கு தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவராக அமைந்துள்ளார். எனினும் அவர் மீதான புகார்கள் காரணமாக அவருக்கு சில ஆண்டுகள் ரெட் கார்டு கொடுக்கப்பட்டது.

ott hesitate to buy vadivelu movie in high price

அதனை தொடர்ந்து மீண்டும் அவர் கதாநாயகனாகவும் முன்னணி கதாபாத்திரமாகவும் நடிக்கத் தொடங்கினார். இதில் அவர் கதாநாயகனாக நடித்த “நாய் சேகர் ரிட்டன்ஸ்” திரைப்படம் தோல்வி திரைப்படமாக அமைந்தது. 

எப்படி விலைக்கு வாங்குறது?…

வடிவேலு, பகத் பாசில் ஆகியோர் “மாமன்னன்” திரைப்படத்தில் நடித்திருந்தார்கள். இத்திரைப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து பகத் பாசிலும் வடிவேலுவும் “மாரீசன்” என்ற திரைப்படத்தில் மீண்டும் இணைந்து நடித்துள்ளனர். 

ott hesitate to buy vadivelu movie in high price

“மாரீசன்” திரைப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரித்துள்ளார். சுதீஷ் ஷங்கர் என்பவர் இத்திரைப்படத்தை இயக்கியுள்ள நிலையில் யுவன் ஷங்கர் ராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

இந்த நிலையில் இத்திரைப்படத்தை ஓடிடி நிறுவனத்திற்கு அதிக விலைக்கு விற்க படக்குழு முயற்சி செய்ய, ஆனால் ஓடிடி நிறுவனமோ வடிவேலுவின் “நாய் சேகர் ரிட்டன்ஸ்” திரைப்படத்தின் தோல்வியை சுட்டிக்காட்டி “மாரீசன்” திரைப்படத்தை அதிக விலைக்கு வாங்க மறுத்துள்ளதாம். இதனால் இத்திரைப்படத்தின் வெளியீடுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

  • aadhavan movie story wrote for vijayakanth விஜயகாந்துக்காக எழுதப்பட்ட கதையில் ஹீரோவாக ஆன சூர்யா? ஆச்சரியமா இருக்கே!
  • Related Articles

    aadhavan movie story wrote for vijayakanth
    Cinema News

    விஜயகாந்துக்காக எழுதப்பட்ட கதையில் ஹீரோவாக ஆன சூர்யா? ஆச்சரியமா இருக்கே!

    புரட்சி கலைஞர்  தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாது தமிழக மக்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடம்...

    coolie movie digital business beat endhiran 2 business
    Cinema News

    2.0 சாதனையை ஓவர் டேக் செய்த கூலி? இவ்வளவு தொகைக்கு பிசினஸ் ஆகியிருக்கா? அடேங்கப்பா!

    ரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜ் கூட்டணி லோகேஷ் கனகராஜ் ரஜினியை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் இறுதிகட்ட...

    shankar son arjith shankar introducing as a hero
    Cinema News

    ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன்? அதுவும் இந்த இயக்குனரோட படத்துலயா? 

    பிரம்மாண்டம்னா ஷங்கர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவே வியந்து பார்க்கிற ஒரு பிரம்மாண்ட இயக்குனர்தான்...

    priya bhavani shankar has no chance in tamil cinema
    Cinema News

    பிரியா பவானி ஷங்கருக்கு தமிழில் வாய்ப்புகளே வரவில்லை- வருத்ததை பகிர்ந்த தயாரிப்பாளர்…

    ராசியில்லாத நடிகை தொலைக்காட்சியில் இருந்து சினிமாவிற்குள் ஹீரோயினாக நுழைந்த பிரியா பவானி ஷங்கரை சமீப காலமாக...