Monday , 24 March 2025
Home Cinema News உடல்நிலை சரியில்லை… ப்ளீஸ் அவரை தப்பா பேசாதீங்க – சாய்ரா பானு வேண்டுகோள்!
Cinema News

உடல்நிலை சரியில்லை… ப்ளீஸ் அவரை தப்பா பேசாதீங்க – சாய்ரா பானு வேண்டுகோள்!

saira banu

ஏ ஆர் ரகுமான் விவாகரத்து:

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இசையமைப்பாளர் ஏ ஆர்ரகுமானை தான் விவாகரத்து செய்ய போவதாக அவரது மனைவி சாய்ரா பானு தெரிவித்து பெரும் அதிர்ச்சியை கிளப்பினார்.. அதை எடுத்து ஏ ஆர் ரகுமானும் அதை உறுதி செய்தார். இந்த விவகாரம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

இப்படியான நேரத்தில் ஏ ஆர் ரகுமானை குறித்து விதவிதமான செய்திகள் வெளியான வண்ணம் இருக்கிறது. குறிப்பாக அவர் வேறொரு பெண் உடன் தொடர்பில் இருக்கிறார். வேறொரு பெண்ணுடன் விரைவில் திருமணம் என்றெல்லாம் செய்திகள் வெளியாவதை கண்டு அவரும் அவரது மனைவியும் கடும் அதிருப்திக்குள்ளாகி இருக்கிறார்கள் .

youtube தளங்கள் மீது பாயும் வழக்கு:

இதை அடுத்து சம்பந்தப்பட்ட யூடியூப் தளங்கள் மீது நோட்டீஸ் அனுப்பி அதை நீக்குமாறு அவரது வக்கீல் கேட்டுக் கொண்டார்கள். இப்படியான நேரத்தில் ஏ ஆர் ரகுமானின் மனைவி சாய்ரா பானு விளக்கம் கொடுத்திருப்பது சமூக வலைதளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

அதில் அவர் கூறி இருப்பதாவது நான் சாய்ரா பானு ரகுமான் பேசுகிறேன். நான் தற்போதும் மும்பையில் இருக்கிறேன். கடந்த இரண்டு மாதங்களாக எனக்கு உடல்நிலை சரியில்லை. அதனால்தான் நான் ஏ ஆர் ரகுமானிடம் இருந்து கொஞ்சம் விலகி இருக்க விரும்பினேன்.

உடல் நிலை சரியில்லை:

ஆனால், youtube பயனர்கள் தமிழக ஊடகத்தினர் அவருக்கு எதிராக நிறைய விஷயங்களை பரப்பி விடுகிறார்கள். தயவுசெய்து அந்த மாதிரி செய்ய வேண்டாம். அவர் அருமையான நபர் உலகின் தலைசிறந்த மனிதர் ரகுமான். எனது உடல்நிலை பிரச்சனை காரணமாக நான் சென்னை விட்டு வெளியேற நேர்ந்தது.

மும்பையில் சிகிச்சை பெற்று வருவதால் சென்னையில் ஏ ஆர் ரகுமான் பிசியாக இருக்கும் வேலைகளுக்கு நடுவே இது சாத்தியமாகி இருக்காது. நான் அவரையோ எனது குழந்தைகளையோ தொந்தரவு செய்ய விரும்பவில்லை. ஏ ஆர் ரகுமான் ஒரு அற்புதமான மனிதர் அவர் எப்படி இருக்கிறாரோ அப்படியே அவரை இருக்க விடுங்கள்.

அவர் மிகச்சிறந்த நபர்:

அவருக்கும் எதிலும் எந்த தொடர்பும் இல்லை. நான் என் உயிருக்கும் மேலாக அவரை நம்புகிறேன் அந்த அளவிற்கு நான் அவரை நேசிக்கிறேன். அவரும் அவ்வாறே நேசிக்கிறார். எனவே அவர் மீதான அனைத்து பொய்யான குற்றச்சாட்டுகளையும் நிறுத்துமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

கடவுள் ஆசிர்வதிக்கட்டும் இந்த நேரத்தில் நீங்கள் தனிமைக்கு இடம் கொடுக்க கேட்டுக் கொள்கிறேன் இதுவரை எதுவுமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. நான் விரைவில் சென்னைக்கு வருவேன் ஆனால் நான் என் சிகிச்சை நிறைவு செய்ய வேண்டும்.

எனவே ரஹ்மானின் பெயருக்கு கலங்கும் விளைவிக்கும் கீழ்த்தரமான செயலை தயவு செய்து இத்தோடு நிறுத்திக் கொள்ள நான் கேட்டுக்கொள்கிறேன் மீண்டும் சொல்கிறேன் நான் சொன்னது போல அவர் ஒரு மிகச்சிறந்த நபர் என அதை மறுபடியும் தெரிவித்திருந்தார் சாய்ரா பானு அவரின் இந்த தெளிவான விளக்கம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.

  • jananayagan movie pongal release பொங்கலுக்கு எப்பவுமே குறி தப்பாது! இது ஜனநாயகன் பொங்கல்…
  • Related Articles

    jananayagan movie pongal release
    Cinema News

    பொங்கலுக்கு எப்பவுமே குறி தப்பாது! இது ஜனநாயகன் பொங்கல்…

    விஜய்யும் பொங்கலும் பொங்கல் தினத்தில் வெளியாகும் விஜய் திரைப்படங்கள் பெரும்பாலும் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும். “கோயம்பத்தூர்...

    the first choice for oo solriya song was ketika sharma
    Cinema News

    ஊ சொல்றியா பாடலுக்கு நடனமாடும் வாய்ப்பை தவறவிட்ட டிரெண்டிங் நடிகை? ஓஹோ!

    ஊ சொல்றியா மாமா அல்லு அர்ஜூனின் “புஷ்பா” திரைப்படத்தில் இடம்பெற்ற “ஊ சொல்றியா” பாடலை யாராலும்...

    Cinema News

    நயன்தாரா செய்த காரியத்தால் படப்பிடிப்பை விட்டு கோபமாக வெளியேறிய உதவி இயக்குனர்? என்னப்பா இது?

    மூக்குத்தி அம்மன் 2 நயன்தாரா தற்போது “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தில் நடித்து வருகிறார். “மூக்குத்தி...

    vijay antony introduce his relative to cinema
    Cinema News

    தமிழ் சினிமாவில் வரிசையாக அறிமுகமாகும் தயாரிப்பாளர்களின் வாரிசுகள்? வெறித்தனமா இறங்குறாங்க போலயே!

    வாரிசு நடிகர்கள் பாலிவுட், டோலிவுட் போன்ற துறைகளில் தயாரிப்பாளர்களின் வாரிசுகளோ அல்லது நடிகர், இயக்குனர்களின் வாரிசுகளோ...