Tuesday , 18 March 2025
Home Cinema News சிவாஜி வீடு ஜப்தி…உண்மையை புரிஞ்சிக்காம பேசுறீங்களே- தயாரிப்பாளருக்கு போன் போட்டு அழுத பிரபு… 
Cinema News

சிவாஜி வீடு ஜப்தி…உண்மையை புரிஞ்சிக்காம பேசுறீங்களே- தயாரிப்பாளருக்கு போன் போட்டு அழுத பிரபு… 

prabhu cried because of producer talking about Sivaji house seize

அதிர்ச்சியை அளித்த தீர்ப்பு

சிவாஜியின் மூத்த மகனான ராம்குமாருக்கு துஷ்யந்த் என்றொரு மகன் இருக்கிறார். இவர் “சக்ஸஸ்”, “மச்சி”, “தீர்க்கதரிசி” போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். “மீன் குழம்பும் மண் பானையும்” என்ற திரைப்படத்தை தயாரித்தும் உள்ளார். அந்த வகையில் 2018 ஆம் ஆண்டு இவர் தயாரித்த திரைப்படம்தான் “ஜகஜால கில்லாடி”. 

prabhu cried because of producer talking about Sivaji house seize

இத்திரைப்படத்தை தயாரிக்க துஷ்யந்த் தனபாக்கியம் என்டெர்பிரைசஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து ரூ.3.74 கோடி கடனாக பெற்றுள்ளார். இந்த கடனை அவர் திருப்பி செலுத்ததனால் தனபாக்கியம் என்டெர்பிரைசஸ் நிறுவனம் நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வாங்கிய கடனை வட்டியோடு சேர்த்து ரூ.9.39 கோடியாக திருப்பி தர வேண்டும் எனவும் “ஜகஜால கில்லாடி” திரைப்படத்தின் அனைத்து உரிமைகளையும் தனபாக்கியம் என்டெர்பிரைசஸ் நிறுவனத்திடம் வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார். 

ஆனால் அத்திரைப்படத்தின் உரிமைகளை தனபாக்கியம் என்டெர்பிரைசஸ் நிறுவனத்திற்கு வழங்க துஷ்யந்த் தரப்பு மறுத்துவிட்டது. இதனை தொடர்ந்து தனபாக்கியம் என்டெர்பிரைசஸ் நிறுவனம் சிவாஜி கணேசனின் வீட்டை பொது ஏலத்திற்கு விடக்கோரி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் துஷ்யந்த் நீதிமன்றத்தில் பதிலளிக்க கால அவகாசமும் கொடுக்கப்பட்டது. ஆனால் துஷ்யந்த் தரப்பு கால அவகாசம் முடிந்த பிறகும் கூட பதிலளிக்கவில்லை என்பதால் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய நீதிமன்றம் சமீபத்தில் பிறப்பித்த உத்தரவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

அது பிரபு வீடு

இதனை தொடர்ந்து சிவாஜியின் மூத்த மகனான ராம்குமார், “சிவாஜியின் அன்னை இல்லம் ஜப்தி உத்தரவை ரத்து செய்ய வேண்டும். ஜப்தி உத்தரவிற்குள்ளான இல்லம் எனது சகோதரர் பிரபுவுக்கு உரியது” என நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளார். இதனை தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து தயாரிப்பாளர் கே.ராஜன் ஒரு விழாவில் பேசியபோது,  “சிவாஜி வீட்டை ஜப்தி செய்ய வேண்டும் என்று வெளியான தீர்ப்பால் நான் அழுதுவிட்டேன்” என கூறினார். ஏற்கனவே இது குறித்து அவர் ஒரு பேட்டியில் தனது கவலையை பகிர்ந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

prabhu cried because of producer talking about Sivaji house seize

பாதி உண்மைதான் இருக்கு…

மேலும் அவ்விழாவில் பேசிய கே.ராஜன், தான் கவலையோடு பேசியதை அடுத்து தன்னை பிரபு தொடர்புகொண்டதாக கூறினார். கே.ராஜனை தொடர்புகொண்ட பிரபு, “அண்ணே, உங்க பேச்சை கேட்டு நான் அழுதுட்டேன். ஆனால் இதுல பாதிதான் உண்மை. அந்த வீட்டை அப்பா என் பெயரில் எழுதியிருக்கிறார். இதில் ஏதோ குளறுபடி நடந்திருக்கிறது. ஆதலால் இந்த வீடு ஏலம் போகாதுண்ணே” என கூறினாராம். 

  • sourav ganguly acting in netflix web series வெப் சீரீஸில் அறிமுகமாகிறாரா சௌரவ் கங்குலி? உண்மைத்தன்மை என்ன?
  • Related Articles

    sourav ganguly acting in netflix web series
    Cinema News

    வெப் சீரீஸில் அறிமுகமாகிறாரா சௌரவ் கங்குலி? உண்மைத்தன்மை என்ன?

    பெங்கால் தாதா கிரிக்கெட் உலகில் பெங்கால் தாதா என்று பெயர் பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின்...

    harris jayaraj refused 10 films of vijay
    Cinema News

    விஜய் படத்துக்குலாம் No சொல்லிட்டேன், 10 படத்துக்கு மியூசிக் போடவேண்டியது, ஆனா- உண்மையை உடைத்து பேசிய ஹாரிஸ் ஜெயராஜ்

    ஹாரிஸ் மாமா 90’ஸ் கிட்களால் ஹாரிஸ் மாமா என்று செல்லமாக அழைக்கப்படும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்,...

    aadhavan movie story wrote for vijayakanth
    Cinema News

    விஜயகாந்துக்காக எழுதப்பட்ட கதையில் ஹீரோவாக ஆன சூர்யா? ஆச்சரியமா இருக்கே!

    புரட்சி கலைஞர்  தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாது தமிழக மக்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடம்...

    coolie movie digital business beat endhiran 2 business
    Cinema News

    2.0 சாதனையை ஓவர் டேக் செய்த கூலி? இவ்வளவு தொகைக்கு பிசினஸ் ஆகியிருக்கா? அடேங்கப்பா!

    ரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜ் கூட்டணி லோகேஷ் கனகராஜ் ரஜினியை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் இறுதிகட்ட...