Monday , 24 March 2025
Home Cinema News உன் அலப்பறை தாங்க முடியலம்மா…. நாய்க்கு கூட Producer’யிடம் பணம் கேட்கும் ராஷ்மிகா?
Cinema News

உன் அலப்பறை தாங்க முடியலம்மா…. நாய்க்கு கூட Producer’யிடம் பணம் கேட்கும் ராஷ்மிகா?

rashmika

இந்திய சினிமாவில் நட்சத்திர ஹீரோயின் ஆக தவிர்க்க முடியாத இடத்தை பிடித்திருப்பவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா.

கன்னடம் , தமிழ் , தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பலமொழி திரைப்படங்கள் நடித்து பிரபலமான நடிகையாக பெரும் புகழ்பெற்றிருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா முதன்முதலில் கன்னட சினிமாவில் வெளிவந்த க்ரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகம் ஆனார்.

அந்த திரைப்படம் நல்ல அறிமுகத்தை அவருக்கு கொடுக்க கன்னட சினிமாவில் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார்.

முதல் படமே மிகச் சிறந்த வசூல் ஈட்டி பெரும் சாதனை படைத்தது. இதனால் ராஷ்மிகா மந்தனா அடையாளமாக பார்க்கப்பட்டார்.

தொடர்ந்து கன்னட சினிமாவில் அடுத்தடுத்து வாய்ப்புகள் அவருக்கு தேடி வர கதை தேர்வில் அதிக கவனத்தை செலுத்தி நடித்தார்.

தொடர்ந்து வெற்றிகளை குவிக்க தொடங்கினார். மேலும் தெலுங்கு சினிமாவில் இருந்தும் அவருக்கு தொடர்ச்சியாக திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொட்டதெல்லாம் ஹிட் அடித்தது.

தெலுங்கில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். முதலில் தெலுங்கில் சலோ திரைப்படத்தின் மூலமாக நடித்து அறிமுகம் ஆனார்.

அவருக்கு கீதா கோவிந்தம் திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படம் அமைந்து அவரை அந்தஸ்தில் உட்கார வைத்தது.

மேலும் அவரது குறும்புத்தனமான பேச்சும் நடவடிக்கையும் மக்களை வெகுவாக கவர்ந்தது என்று சொல்லலாம்.

இதை அடுத்து தமிழ் சினிமாவில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த சுல்தான் திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார்.

தொடர்ந்து பாலிவுட் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்க அங்கும் தொடர்ச்சியாக அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வந்தார்.

பாலிவுட் சினிமாவின் நட்சத்திர ஹீரோவான ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் திரைப்படத்தில் நடித்திருந்தார் .

Also Read : இடுப்பு பிடிச்சுக்கோ…மாற்றுத்திறனாளி ரசிகரின் மனதை குளிரவைத்த பிரபல நடிகை!

இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது விமர்சன ரீதியாக மோசமான விமர்சனங்களை சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது .

இப்படியான நேரத்தில் சொல்லப்படும் தகவல் என்னவென்றால் படப்பிடிப்பு தளங்களுக்கு ராஷ்மிகா மந்தனா செல்லும்போது தன்னுடைய செல்லப்பிராணியான நாய்க்குட்டி கூடவே அழைத்து செல்கிறாராம்.

அது மட்டும் இல்லாமல் அந்த நாய்க்கு தேவையான செலவுகளையும் producer பணத்தில் காலி செய்கிறாராம். படத்திற்கு ஒப்பந்தம் ஆகும்போது தன்னுடைய செல்லப்பிராணி தன்னுடன் தான் இருக்கும் என்ற வகையில் அவர் கண்டீஷன் போட்டு விடுகிறாராம்.

இதனால் வேறு வழி இல்லாமல் தயாரிப்பாளர்களும் ஒத்துக் கொள்கிறார்கள். ராஷ்மிகா மந்தனாவுக்கும் சேர்த்து அதன் நாய்க்கு கூட ப்ரொடியூசர் தான் பணம் செலவு செய்ய வேண்டுமா? என்ற ஒரு கேள்வி விமர்சனத்தை எழுப்பிள்ளது .

இதேபோல் தான் நடிகை நயன்தாரா முன்னதாக தனது இரட்டை குழந்தைகளை சூட்டிங் ஸ்பாட்டிற்கு அழைத்துச் செல்லும்போது அந்த குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் ஆயாவிற்கும் தயாரிப்பாளர் தான் பணம் செலவு செய்ய வேண்டியுள்ளது என்ற ஒரு விமர்சனம் எழுந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  • jananayagan movie pongal release பொங்கலுக்கு எப்பவுமே குறி தப்பாது! இது ஜனநாயகன் பொங்கல்…
  • Related Articles

    jananayagan movie pongal release
    Cinema News

    பொங்கலுக்கு எப்பவுமே குறி தப்பாது! இது ஜனநாயகன் பொங்கல்…

    விஜய்யும் பொங்கலும் பொங்கல் தினத்தில் வெளியாகும் விஜய் திரைப்படங்கள் பெரும்பாலும் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும். “கோயம்பத்தூர்...

    the first choice for oo solriya song was ketika sharma
    Cinema News

    ஊ சொல்றியா பாடலுக்கு நடனமாடும் வாய்ப்பை தவறவிட்ட டிரெண்டிங் நடிகை? ஓஹோ!

    ஊ சொல்றியா மாமா அல்லு அர்ஜூனின் “புஷ்பா” திரைப்படத்தில் இடம்பெற்ற “ஊ சொல்றியா” பாடலை யாராலும்...

    Cinema News

    நயன்தாரா செய்த காரியத்தால் படப்பிடிப்பை விட்டு கோபமாக வெளியேறிய உதவி இயக்குனர்? என்னப்பா இது?

    மூக்குத்தி அம்மன் 2 நயன்தாரா தற்போது “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தில் நடித்து வருகிறார். “மூக்குத்தி...

    vijay antony introduce his relative to cinema
    Cinema News

    தமிழ் சினிமாவில் வரிசையாக அறிமுகமாகும் தயாரிப்பாளர்களின் வாரிசுகள்? வெறித்தனமா இறங்குறாங்க போலயே!

    வாரிசு நடிகர்கள் பாலிவுட், டோலிவுட் போன்ற துறைகளில் தயாரிப்பாளர்களின் வாரிசுகளோ அல்லது நடிகர், இயக்குனர்களின் வாரிசுகளோ...