Monday , 24 March 2025
Home Cinema News அது என் வீடு இல்ல, பிரபு வீடு- சிவாஜி இல்லம் ஜப்தி விவகாரத்தில் வாய்திறந்த ராம்குமார்…
Cinema News

அது என் வீடு இல்ல, பிரபு வீடு- சிவாஜி இல்லம் ஜப்தி விவகாரத்தில் வாய்திறந்த ராம்குமார்…

sivaji ganesan annai illam seize issue ramkumar asked to stop the verdict

அன்னை இல்லம்

நடிகர் திலகமாக புகழ்பெற்ற  சிவாஜி கணேசன் வாழ்ந்த இல்லமான அன்னை இல்லம் சென்னை தி.நகரில் அமைந்துள்ளது. இந்த அன்னை இல்லத்தை ஜப்தி செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள செய்தி குறித்துதான் கடந்த இரண்டு நாட்களாகவே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

sivaji ganesan annai illam seize issue ramkumar asked to stop the verdict

ஏன் இந்த தீர்ப்பு…

சிவாஜி கணேசனின் பேரனான துஷ்யந்த் “ஈசன் புரொடக்சன்ஸ்” என்ற நிறுவனத்தின் மூலமாக “ஜகஜால கில்லாடி” என்று ஒரு திரைப்படத்தை தயாரித்திருந்தார்.

அந்த வகையில் இத்திரைப்படத்தை தயாரிக்க தயாரிப்பாளர் துஷ்யந்த் தனபாக்கியம் என்டெர்பிரைசஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து ரூ.3.74 கோடி கடனாக பெற்றுள்ளார். 

sivaji ganesan annai illam seize issue ramkumar asked to stop the verdict

இந்த கடனை திருப்பி செலுத்தாததால் தனபாக்கியம் என்டெர்பிரைசஸ் நிறுவனம் நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வாங்கிய கடனை வட்டியுடன் சேர்த்து ரூ.9.39 கோடியை திருப்பி தரவேண்டும் எனவும் “ஜகஜால கில்லாடி” திரைப்படத்தின் அனைத்து உரிமைகளையும் தனபாக்கியம் என்டெர்பிரைசஸ் நிறுவனத்திடம் வழங்கவேண்டும் எனவும் தீர்ப்பளித்தார். 

ஆனால் பட உரிமைகளை வழங்க துஷ்யந்த் தரப்பு மறுத்துவிட்டது. இதனை தொடர்ந்து தனபாக்கியம் என்டெர்பிரைசஸ் நிறுவனம் சிவாஜி கணேசனின் வீட்டை பொது ஏலத்திற்கு விடக்கோரி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் துஷ்யந்த் நீதிமன்றத்தில் பதிலளிக்க கால அவகாசமும் கொடுக்கப்பட்டது. 

ஆனால் துஷ்யந்த் தரப்பு நீதிமன்றத்தில் பதிலளிப்பதற்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 

உத்தரவை ரத்து செய்யவேண்டும்

இந்த நிலையில் “அன்னை இல்லம் ஜப்தி உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.  ஜப்தி உத்தரவுக்குள்ளான இல்லம் எனது சகோதரர் பிரபுவுக்கு சொந்தமானது” என சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் தரப்பு உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளதாக சில நிமிடங்களுக்கு முன்பு செய்தி வெளியாகியுள்ளது. சிவாஜி கணேசனின் மூத்த மகனான ராம்குமாரின் மகனே துஷ்யந்த் என்பது குறிப்பிடத்தக்கது. 

  • jananayagan movie pongal release பொங்கலுக்கு எப்பவுமே குறி தப்பாது! இது ஜனநாயகன் பொங்கல்…
  • Related Articles

    jananayagan movie pongal release
    Cinema News

    பொங்கலுக்கு எப்பவுமே குறி தப்பாது! இது ஜனநாயகன் பொங்கல்…

    விஜய்யும் பொங்கலும் பொங்கல் தினத்தில் வெளியாகும் விஜய் திரைப்படங்கள் பெரும்பாலும் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும். “கோயம்பத்தூர்...

    the first choice for oo solriya song was ketika sharma
    Cinema News

    ஊ சொல்றியா பாடலுக்கு நடனமாடும் வாய்ப்பை தவறவிட்ட டிரெண்டிங் நடிகை? ஓஹோ!

    ஊ சொல்றியா மாமா அல்லு அர்ஜூனின் “புஷ்பா” திரைப்படத்தில் இடம்பெற்ற “ஊ சொல்றியா” பாடலை யாராலும்...

    Cinema News

    நயன்தாரா செய்த காரியத்தால் படப்பிடிப்பை விட்டு கோபமாக வெளியேறிய உதவி இயக்குனர்? என்னப்பா இது?

    மூக்குத்தி அம்மன் 2 நயன்தாரா தற்போது “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தில் நடித்து வருகிறார். “மூக்குத்தி...

    vijay antony introduce his relative to cinema
    Cinema News

    தமிழ் சினிமாவில் வரிசையாக அறிமுகமாகும் தயாரிப்பாளர்களின் வாரிசுகள்? வெறித்தனமா இறங்குறாங்க போலயே!

    வாரிசு நடிகர்கள் பாலிவுட், டோலிவுட் போன்ற துறைகளில் தயாரிப்பாளர்களின் வாரிசுகளோ அல்லது நடிகர், இயக்குனர்களின் வாரிசுகளோ...